Friday, May 11, 2012

குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக் எழுதிய கவிதை




நூலாசிரியர்

இப்றாஹீம் எம். றபீக்கின் குருத்து மணல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வின் போது என்னால்  வாசிக்கப்பட்ட உரை

டீன்கபூர்

குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக் எழுதிய கவிதைகள.;

றபீக் சுனாமியால் 65 மீற்றருக்குள் அகப்பட்டு பிரான்ஸ் சிற்றியில் வாழ்கிறார். இந்த குருத்து மணலுக்குள் நான் சில உடையாத சிற்பிகளை பொறுக்கியிருக்கிறேன்.

நீரை உன் அருகில் வைத்துக்கொண்டு தாகத்தால் வாடுவது நன்றாகப் புரிகிறது.
காற்றும் கடும் மழையும் ஆட்டி என்னை அசைத்தது. வாட்டி எடுத்த 
உணவைப்போல் வதங்கிவிட்டது உன்னை எண்ணி என் இதயம்.
உன் பெயரைச் சொல்லிப் பழக்கப்பட்டவை அல்லவா என் உதடுகள்.
சுயநலம் உனது உள்ளத்தில் இருந்தால் சுயமாக இருண்டு போகும் இந்த உலகம்
மாட்டுப் பழை. கைத்தியடி, அல்லிமுல்லை வட்டை, அத்தனை வயல்களிலும் பெண்களின் உழைப்பு.
இந்த வட்டைகளும் பொன்னாய் விளைந்து கிடக்கு.
முந்தானைக்குள் உணவை மூடி மறைத்து காக்கை தன் குஞ்;சுக்கு 
உணவூட்டுதல் போல் நீயும் அப்படியே நடக்கிறாய்.
வெள்ளரிப் பழம் பிளந்தாற்ப்போல் இதயம் பிளப்பதுபோல் இருந்தது. 
வேளாண்மை வயலுகளுக்குள்; இருக்கும் பொம்மை போன்று நான் இருப்பது.
முதுமை என்பது உன் தாய்க்கு மட்டுமல்ல உனக்கும்தான்.
என் இதயவாசல் இருள் சூழ்ந்து கிடக்கிறது.
நல்ல பலாப் பழத்தை மூடி வைத்தாலும் வாசனை வருவது போன்று என் காதலும்.
இன்னும் ஒரு சூரியன் இந்த இகத்திலே முளைக்கும் முன்னே வந்திடுங்க.
காக்கை மரங்களில் தங்குவது போல் நாமும் இந்த உலகில் தங்குகிறோம். 
உன் மனம் விரிந்த கடல், 
உன் பாசம் பரந்த வானம்

இப்படி, பல மாதியான சிப்பிகளை இவருடைய குருத்து மணலுக்குள் பொறுக்க முடியும் என நம்புகிறேன். இன்னும் நிறைய இவ்வாறான சிப்பிகள் கிடக்கின்றன.

றபீக்கின் கவிதைகளுக்குள் நவீனத்துவக் கூறுகள் தென்படுகின்றதா எனப் பார்க்க வேண்டும்.
நவீனத்துவக் கூறுகளைக் கொண்டுள்ள இக்காலக் கவிதைகள் பற்றி சில குறிப்பபுக்களைச் சொல்லலாமென விரும்புகிறேன்.

கவிதை நடைகளைக் கொண்டுதான் ஆரம்ப காலங்களில் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறான கவிதைகளில் உவமை, உருவகம், எதுகை, மோனை, இயைபு, அணி போன்றவற்றைப் பெற்றிருந்தன. இந்த அம்சங்களைக் கொண்ட கவிதைகளில் இருந்து மாறி மரபுக் கவிதைக்குரிய எதையுமே சேர்த்துக்கொள்ளாமல் இன்றைய கவிதைகள் வெளிப்படுகின்றன. றபீpக்கின் கவிதைகள் உட்பட இன்றைய கவிதைகள் நவீனத்துவ அம்சங்களைப் பின்பற்றி எழுதப்படுகின்றன.
நவீனத்துவம் என்பது அரசியல், பொருளியல், தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் என சகல துறைகளையும் ஒரே நேர்கோட்டில் பிரமிக்கத்தக்க விதமாக பாதிக்கின்ற ஒன்று. நவீன அரசமைப்பு, ஜனநாயகம், தேசிய உருவாக்கம், நகரநிர்மாணம், மத்திய தரவர்க்க உருவாக்கம், நீதி வழங்கும் முறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பின்வருவன கவிதைகளுக்கான நவீனத்துக் கூறுகளாகும்.
1. கவிதைக்குரிய மரபைப் புறம் தள்ளிவிடுதல்.
2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவின் அமைப்பு.
3. வாசகனுக்கு முழுமையாகச் சிந்திக்கும் இடத்தை வழங்குதல்.
4. பூடகமான தன்மை.

கவிதைக்குரிய மரபைப் புறம்தள்ளிவிடுதல் என்று சொல்லும்போது இக்காலக் கவிஞர்கள் கூடுதலாக கவிதைகளுக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, எதுகை, மோனை, இயைபு போன்ற மரபுகளை ஒதுக்கிவிட்டு கவிதை இயற்றுகின்றனர். உரை நடையைச் சிதைத்து கவிதை படைக்கின்றார்கள். கவிதையால் நேரில் முகம் பார்த்துப் பேசுவது ஒரு நேர்முகத் தன்மையாக இருக்கிறது. இன்றைய நவீன கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி கவிதைகள் எழுதுகின்றனர்.
இரண்டாவது கூறு படைப்பாளனுக்கும் வாசகனுக்குமுள்ள உறவின் அமைப்பு. இது படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபு சார் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளியைக் ஏற்படுத்துகிறது. நவீன கவிதைகளின் இடைவெளி சுருங்குகிறது. கவிஞன் தனது குடும் நிலவரத்தையும், தன்னையும், தன்னைப் பாதித்தவற்றையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும், வாசகனுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் அண்மித்துவிடுகிறது. அதாவது பொதுவான தூரப்பட்ட விடயங்களைவிட தனிமனிதனது நிலையைக் கூறுவதால் படைக்கின்ற வருக்கும். வாசிக்கவருக்கும் இடையே உறவு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது.

வாசகனுக்கு முழுமையாகச் சிந்திக்கும் இடத்தை வழங்குவது மூன்றாவது கூறாகும்.
படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக்கூறி வாசகன் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைமைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும் என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
மற்றொரு கூறு பூடகத் தன்மை.

நேராகச் சென்று மையத்தைப் பெறமுடியாமல் அதாவது கவிதையின் கருவைப் பெறமுடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவது குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத் தன்மையாகும். மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கினால் கருவை உணரமுடியும்.
இவ்வாறாக நவீனத்துவமான கவிதைகள் மரபுக் கவிதைகளிலிருந்து வேறுபடுகின்றன. எந்தவொரு சிறு விடயத்தைப் பற்றிக் கூறுவதற்கும் இடமளிக்கிறது நவீனத்துவமான கவிதைகள். வாசகனுக்கும் ஒரு படைப்பாளியின் நிலைக்குச் சிந்திக்க இடமிருப்பதால் தற்காலக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தற்கால தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் நவீனத்துவக் கவிதைகளின் கூறுகள் பற்றிச் சொல்லும்.

ஆக, கவிதைகள் அழ வைக்க வேண்டும் இல்லையெனில் எழு வைக்க வேண்டும் இது அழக பாரதியின் கவிதை.

றபீக்கின் கவிதைகள் மேற்கூறிய கூறுகளையும் உள்வாங்கி இருக்குமா? றபீக் ஒரு மரபுவழிக் கவிஞன். இந்ந குருத்துமணலில் மரபு வழிக் கவிதைகளுக்கான சொதி மணத்துக்கொண்டுதான் இருக்கிறது.


No comments:

Post a Comment